காடை முட்டையின் நன்மைகள்
வணக்கம் நண்பர்களே காடை முட்டை சுவைத்திருக்கிறீர்களா என்று கேட்டாலே, பலருக்கும் முகம் பல கோணங்களில் செல்லும். காடை முட்டையெல்லாம் சாப்பிடுவார்கள் என்று பலரும் கேள்வி எழுப்புவார்கள். ஆனால் உண்மையில் காடை முட்டையில் கோழி முட்டை விட ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.
கிராம பகுதிகளில் காடை முட்டையை பச்சையாக குடிப்பார்கள். காடை முட்டையை குழம்பு வைத்து சாப்பிட்டால் இன்னும் ருசியாக இருக்கும். மேலும் காடை முட்டை போன்றே அதன் இறைச்சியிலும் நிறைய சத்துக்கள் உள்ளது. சிக்கன், மட்டனுக்கு பின், பல பெரிய ஹோட்டல்களில் காடை இறைச்சி தான் அதிகம் விற்பனையாகிறது.
அசைவ உணவுகளில் முட்டைக்கென்று தனி இடமுள்ளது.அந்த வகையில் சமீப காலமாக அசைவ பிரியர்கள் காடை முட்டைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். இதற்கு என்ன காரணமென்றால் காடை முட்டையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது என்பது தான் முதல் காரணம் என்று சொல்லலாம்.
கோழிகளைப் போலல்லாமல், காடைகளுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது, மேலும் அவற்றின் முட்டைகள் எதையும் தொற்றுவதற்கான வாய்ப்புகள் குறைவு. காடை முட்டை பார்ப்பதற்கு கொஞ்சம் சிறிதாகவும், இதன் முட்டை ஓடு சற்று கரும்புள்ளிகளுடன் காணப்படும். இந்த காடை முட்டையை சாப்பிடுவதினால் ஏராளமான ஆரோக்கிய பிரச்சனைகள் சரியாகும் என்றால் நம்புவீர்வீகளா..?
ஆம் இந்த காடை முட்டையை சாப்பிடுவதினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், இரத்த சோகை, அல்சர் போன்ற பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகளை குணப்படுத்த முடியும். சரி இந்த பதிவில் காடை முட்டையில் என்னென்ன ஊட்டச்சத்துக்கள் உள்ளது, காடை முட்டை சாப்பிடுவதினால் ஏற்படும் நன்மைகளை பற்றி படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க!!!!
காடை முட்டை மருத்துவ பயன்கள்:
ஒரு கோழி முட்டையுடன் ஒப்பிடும்போது, ஒரு கிராம் காடையில் அதிக வைட்டமின்கள் உள்ளன: “ஏ” - 2.5 முறை, “பி 1” - 2.8, மற்றும் “பி 2” - 2.2 முறை. வைட்டமின் டி இந்த முட்டைகளில் செயலில் உள்ளது; இது ரிக்கெட்ஸ் வளர்ச்சியை தடுக்கிறது.
கோழி முட்டைகளுடன் ஒப்பிடுகையில், இந்த முட்டைகளில் பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் அளவு 5 மடங்கு அதிகமாகவும் இரும்பில் 4.5 மடங்கு அதிகமாகவும் உள்ளது. உங்களுக்கு தெரியும், பாஸ்பரஸ் மன வளர்ச்சிக்கு பங்களிக்கிறது. எனவே, அனைத்து மாணவர்களுக்கும் காடை முட்டைகளை உணவில் சேர்ப்பது பயனுள்ளது.
உதாரணமாக, ஜப்பானில், காடை முட்டைகளின் பயனுள்ள பண்புகள் நீண்ட காலமாக நன்கு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன, ஒவ்வொரு பள்ளி மாணவரும் மதிய உணவிற்கு ஒவ்வொரு நாளும் இரண்டு முட்டைகளை பெற வேண்டும். ஒவ்வாமைக்கு சிகிச்சையளிக்க ஒரு மருத்துவ தயாரிப்பு (ஓவோமுகாய்டு சாறு) மருந்தியல் வல்லுநர்கள் பயன்படுத்துகின்றனர்.
இந்த முட்டைகளின் பயன்பாடு இரைப்பை அழற்சியின் சிகிச்சையில் சிறந்த முடிவுகளைத் தருகிறது - இரைப்பை புண் மற்றும் 12 டூடெனனல் bமற்றும் கணைய அழற்சி.காடை முட்டைகள் உடலில் இருந்து ரேடியோனூக்லைடுகளை அகற்ற உதவுகின்றன.எனவே அவை கதிர்வீச்சுக்கு ஆளானவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகின்றன.
முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:உலகில் அதிகளவு மக்களால் விரும்பப்படும் ஒரு ஆரோக்கியமான உணவு என்றால் அது முட்டைதான். காடை முட்டையில் வைட்டமின்களும், இதரசத்துக்களும், கோழி முட்டையை விட அதிகம் உள்ளது. நாட்டு கோழி முட்டையை விட காடை முட்டையில் அதிகளவு புரதச்சத்து நிறைந்துள்ளது. 100 கிராம் காடை முட்டையில் என்னென்ன ஊட்டச்சத்துக்கள் உள்ளது என்று தெரிந்து கொள்வோம்.
1. பொட்டாசியம் 132 மில்லி கிராம்,
2. சோடியம் 141 மில்லிகிராம்,
3. கார்போஹைட்ரேட் 0.4 கிராம்,
4. சர்க்கரை சத்து 0.4 கிராம்,
5. புரதச்சத்து 13 கிராம்,
6. விட்டமின் ஏ 10%,
7. கால்சியம் 6%,
8. விட்டமின் டி 13%,
9. விட்டமின் பி12 26%,
10. மெக்னீசி னீ யம் 3%
ஞாபக சக்தியை அதிகரிக்க:காடை முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மூளையின் செயல்பாட்டை தூண்டி ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. மேலும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை சீராக வைத்து கொள்கிறது. எனவே ஞாபக சக்தியை அதிகரிக்க நினைப்பவர்கள் தினமும் அல்லது வாரத்தில் ஒரு முறையாவது இந்த காடை முட்டையை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் தங்களின் ஞாபக சக்தியை அதிகரிக்க முடியும்.
சரும அழகை அதிகரிக்க:
செலினியம், வைட்டமின் ஏ மற்றும் அதிக அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருக்கிறது. இது சருமத்தை பாதுகாப்பதோடு, சரும சுருக்கங்கள் ஏற்படுவதையும் தடுக்கும். இதன் மூலமாக என்றும் இளமையாக இருப்பதற்கு மிக உதவியாக இருக்கிறது.
இரத்த சோகை குணமாக:உடலில் புதிய ரத்த உற்பத்திக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய சத்துக்களும் இந்த காடை முட்டையில் அடங்கியிருக்கும். உடலில் இரத்தம் குறைவாக இருப்பவர்கள் இந்த முட்டையை சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்த அளவு சீராக இருக்கும்.
கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது:தேவையான அனைத்து அத்தியாவசிய சத்துக்களும் இந்த காடை முட்டையில் அடங்கியிருக்கும். இவற்றில் இருக்கக்கூடிய அதிக அளவிலான விட்டமின் டி உணவில், கால்சியம் சத்தை உறிஞ்சுவதற்கு மிகவும் உதவியாக இருக்கிறது. இதன் மூலமாக கருவில் இருக்கும் குழந்தையின் எலும்பு வளர்ச்சி நன்றாக இருக்கும். இதை சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது.
குழந்தைகளுக்கு நல்லது:
வளரும் குழந்தைகளுக்கு தினமும் 2 காடை முட்டையைக் கொடுத்து வந்தால், அவர்களின் வளர்ச்சி சீராக இருப்பதோடு, அவர்களது உடல் வலிமையுடனும், நோய்கள் எளிதில் அண்டாமல் அவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
அலர்ஜி பிரச்சனையை குணப்படுத்த:
உடலில் உண்டாகக்கூடிய அலர்ஜி காரணமாக மூக்கிலிருந்து நீர் வடிவது, தும்மல் மற்றும் உடல் சிவந்து காணப்படுவது இது போன்ற அலர்ஜி சார்ந்த பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் இந்த காடை முட்டையை சாப்பிட்டு வந்தால் இதில் இருக்கக்கூடிய ஒரு வகையான புரதம் அலர்ஜியை எதிர்த்து அவை உண்டாகுவதை தடுக்கிறது.
காடை முட்டையில் ஓவோமுகாய்டு என்று சொல்லக்கூடிய புரோட்டீன் உள்ளது. ஆகவே அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள் இந்த காடை முட்டையை தொடர்ந்து சாப்பிட்டு வருவதினால் உடலில் ஏற்படும் அலர்ஜிகள் மற்றும் ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
புற்றுநோய்க்கு – காடை முட்டை பயன்கள்:காடை முட்டையில் புற்றுநோயின் வளர்ச்சியை தடுக்கும் கார்சினோஜெனிக் (carcinogen) என்கின்ற வேதிப்பொருள் அதிகம் உள்ளது. எனவே புற்றுநோய் நமக்கு வராமல் தடுக்கவும், புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கவும் தினமும் ஒரு காடை முட்டையை சாப்பிட்டு வரலாம்.
பார்வை திறனை அதிகரிக்க:இந்த காடை முட்டையில் விட்டமின் ஏ சத்து அதிகமுள்ளது. எனவே தங்கள் பார்வை திறனை பாதுகாக்க காடை முட்டை பயன்படுகிறது. சிறுவயதிலேயே பார்வை குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு இந்த காடை முட்டையை தினமும் உணவில் சேர்த்து வருவதினால் தங்கள் குழந்தையின் பார்வை திறனை அதிகரிக்கலாம்.
அல்சர் குணமாக:அல்சர் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் காடை முட்டையை சாப்பிடுவதினால், செரிமான பாதையில் அல்சரால் ஏற்பட்ட காயங்கள் மற்றும் புண்கள் அனைத்தும் குணமாகும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:
தினமும் முட்டையை சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வலிமை அடையும். இதன் மூலமாக தொற்று நோய்கள் உண்டாகக் கூடிய பல்வேறு பிரச்சனைகள் தடுக்கப்படும். அடிக்கடி காய்ச்சல், ஜலதோஷம் இதுபோன்ற பிரச்சனைகளால் அவதிபடுபவர்கள் காடை முட்டையை சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது.
உடல் ஆரோக்கியமாக இருக்க:
காடை முட்டை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கனிமங்கள் மற்றும் டாக்ஸின்களை அளித்து உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளும். மேலும் காடை முட்டையை பித்தக்கற்கள் மற்றும் சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிடுவதினால் பிரச்சனை கூடிய விரைவில் குணமாகும்.
தசைகள் வலிமை:
அதிக அளவு புரதச்சத்து இருப்பதால் உடற்பயிற்சி செய்பவர்கள் உடல் வலிமை ஆகவேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த காடை முட்டை சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது. இதில் அடங்கி இருக்கக்கூடிய அதிகப்படியான புரதச்சத்து புதிய தசைகள் உருவாவதற்கும், தசைகளை வலிமையாக்கவும் மிகவும் உதவியாக இருக்கும். நல்ல கட்டுக்கோப்பான உடல் வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த காடை முட்டையை தவறாமல் சாப்பிடுங்கள்.
குறிப்பு:
- சர்க்கரை நோய் உள்ளவர்கள் மட்டும் இந்த காடை முட்டையை சாப்பிடுவதற்கு முன்பு தங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று பின் சாப்பிடுவது நல்லது.
- இந்த முட்டைகளின் அடுக்கு வாழ்க்கை சராசரியாக அறை வெப்பநிலையில் 30 நாட்கள் வரை அல்லது குளிர்சாதன பெட்டியில் 60 நாட்கள் வரை இருக்கும்.























